ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி; தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் விலகல்...!

Image Courtesy : @ProteasMenCSA twitter
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே விலகி உள்ளார்.
கேப்டவுன்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த ஒருநாள் போட்டியில் இருந்து காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்க அணி, தற்போது நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் விலகி உள்ளதால் பெரும் சிக்கலில் உள்ளது.
Related Tags :
Next Story






