இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி - தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய மகளிர் அணி


இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி -  தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய மகளிர் அணி
x

Image Courtesy: BCCI Women Twitter 

இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியுடன் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி ஓய்வு பெற உள்ளார்.

லண்டன்,

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி அசத்தினர்.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியுடன் இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி ஓய்வு பெற உள்ளார்.

அதனால் அவரை வெற்றியுடன் வழி அனுப்ப இந்திய வீரர்கள் முயற்சி செய்வர். ஆனால், தொடரில் ஆறுதல் வெற்றி பெற இங்கிலாந்து அணியினர் முயற்சி செய்வர். அதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

1 More update

Next Story