தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டம்; டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு
தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
கேப்டவுண்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. அதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இரு அணிகளுக்கான பிளெயிங் 11 பின்வருமாறு;-
தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், டெம்பா பவுமா (கேப்டன்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், சிசண்டா மகலா, ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மஹாராஜ், தப்ரைஸ் ஷம்சி.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மார்னஸ் லாபுசாக்னே, அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், சீன் அபோட், நாதன் எல்லிஸ், தன்வீர் சங்கா, ஜோஷ் ஹேசில்வுட்.