3வது டி20 : இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி
நியூசிலாந்து 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
பர்மிங்காம்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து அணி 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டி20 தொடர் முதலாவதாக நடைபெற்று வருகிறது. கடந்த 30ம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து 95 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுதி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது.அந்த அணியில் பின் ஆலன் 53 பந்துகளில் 83 ரன்கள் , க்ளென் பிலிப்ஸ் 34 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தனர்.
தொடர்ந்து 203 ரன்கள் இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி , நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இதனால் 18,3 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை 128 ரன்களுக்கு இழந்து ஆட்டமிழந்தது. இதனால் நியூசிலாந்து 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இஷ் சோதி 3 விக்கெட் , கைல் ஜேமிசன் 3 விக்கெட் , டிம் சவுதி 2 விக்கெட் வீழ்த்தினர்.