4வது டி20 போட்டி: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு...!
3 போட்டிகள் முடிவில் 2-1 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
ராய்ப்பூர்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்த 3 போட்டிகள் முடிவில் 2-1 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.இந்த போட்டி சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் ஷாஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி , இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
Related Tags :
Next Story