4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் முகமது ஷமி


4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் முகமது ஷமி
x

கோப்புப்படம்

4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் முகமது ஷமி ஆடுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதுடெல்லி,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஆடிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 3-வது டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் உமேஷ் யாதவ் களம் இறங்கினார்.

இந்நிலையில் ஆமதாபாத்தில் வருகிற 9-ந் தேதி தொடங்கும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் முகமது ஷமி ஆடுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தூர் ஆடுகளம் சர்ச்சையில் சிக்கியதால் ஆமதாபாத் ஆடுகளத்தை எந்த மாதிரி தயாரிக்க வேண்டும் என்று இந்திய அணி நிர்வாகம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் வழக்கம் போல ஆடுகளம் தயார் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதனிடையே இந்தூரில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி 3 நாட்களுக்குள் முடிவுக்கு வந்ததால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மும்பை திரும்பி இருக்கிறார். அவர் நாளை மீண்டும் அணியினருடன் இணைகிறார்.

1 More update

Next Story