5-வது 20 ஓவர் கிரிக்கெட்; டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு


5-வது 20 ஓவர் கிரிக்கெட்; டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு
x

image courtesy; twitter/ @BCCI

இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிட்டது.

பெங்களூரு,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதலாவது ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. ராய்ப்பூரில் நேற்று முன்தினம் நடந்த 4-வது ஆட்டத்தில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story