சென்னை சேப்பாக்கத்தில் 5 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள்..!


சென்னை சேப்பாக்கத்தில் 5 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள்..!
x

சென்னை சேப்பாக்கத்தில் 5 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது.

சென்னை,

இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 மைதானங்களில் இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன.

முதல் போட்டி நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் அக்டோபர் 5-ந் தேதி அகமதாபாத்தில் நடக்கிறது. முதல் அரையிறுதிப் போட்டி நவம்பர் 15-ந் தேதி மும்பையிலும் 2-வது அரையிறுதிப் போட்டி நவம்பர் 16-ந் தேதி கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளன. நவம்பர் 19-ந் தேதி அகமதாபாத்தில் உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐந்து உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் இந்தியா ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாடுகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ம் தேதி சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது.

* அக்டோபர் 8-ந்தேதி (ஞாயிறு): இந்தியா- ஆஸ்திரேலியா

* அக்டோபர் 14-ந்தேதி (சனி): நியூசிலாந்து- வங்காளதேசம்

* அக்டோபர் 18-ந்தேதி (புதன்): நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான்

* அக்டோபர் 23-ந்தேதி (திங்கள்): பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான்

* அக்டோபர் 27-ந்தேதி (வெள்ளி) பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா


Next Story