103 வயது ரசிகருக்கு எம்.எஸ். தோனி கொடுத்த அன்பு பரிசு


103 வயது ரசிகருக்கு எம்.எஸ். தோனி கொடுத்த அன்பு பரிசு
x

தன்னுடைய 103 வயது ரசிகர் ஒருவருக்கு எம்.எஸ். தோனி பரிசு வழங்கியுள்ளார்.

சென்னை,

நடப்பு ஐ.பி.எல். சீசனில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சென்னை அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த எம்.எஸ்.தோனி சாதாரண விக்கெட் கீப்பராக விளையாட வருகிறார். இருப்பினும் அவரை பார்ப்பதற்கு ஒவ்வொரு போட்டியிலும் ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

தோனிக்கு ஆறிலிருந்து அறுபது வயது வரை ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள் என்று தெரியும். ஆனால் தோனிக்கு 103 வயதில் ஒரு ரசிகர் இருக்கிறார். சென்னையை சேர்ந்த இந்த 103 வயது ரசிகரின் பெயர் ராமதாஸ். இவருக்கு கிரிக்கெட் என்றால் அவ்வளவு பிடிக்குமாம். தன்னுடைய இந்த வயதிலும் கூட சி.எஸ்.கே. வின் தீவிர ரசிகராக இருக்கிறார்.

இந்த நிலையில் தன்னுடைய ரசிகர் பற்றி தெரிந்து கொண்ட தோனி ஆச்சரியமடைந்து அவருக்கு ஒரு அன்பு பரிசளித்திருக்கிறார். சி.எஸ்.கே. அணியின் ஜெர்சியில் உங்களுடைய ஆதரவுக்கு மிகவும் நன்றி தாத்தா என்று தோனி குறிப்பிட்டு கையெழுத்திட்டு அவருக்கு கொடுத்திருக்கிறார்.

1 More update

Next Story