டோனியை போன்ற ஒரு கேப்டனை இனி பார்க்க முடியாது - கவாஸ்கர் சொல்கிறார்


டோனியை போன்ற ஒரு கேப்டனை இனி பார்க்க முடியாது - கவாஸ்கர் சொல்கிறார்
x

டோனியை போன்ற ஒரு கேப்டனை இனி பார்க்க முடியாது என்று கவாஸ்கர் கூறினார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில்,

'சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடினமான சூழ்நிலையில் இருந்து எப்படி மீண்டு வர வேண்டும் என்பது நன்கு தெரியும். டோனியின் கேப்டன்ஷிப்பில் மட்டுமே இது சாத்தியமாகும். 200 ஆட்டங்களுக்கு தலைமை தாங்கி இருப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாகும். இவ்வளவு போட்டிகளில் கேப்டனாக இருப்பது ஒரு சுமையாகும்.

இது அவரது ஆட்ட திறனையும் பாதிக்கும். டோனி சற்று வித்தியாசமான கேப்டன். அவரை போன்று கேப்டன் யாரும் இருந்தது கிடையாது. வருங்காலத்திலும் அவரை போன்ற ஒரு கேப்டனை பார்க்கவும் முடியாது' என்றார்.


Next Story