வீராங்கனைகளை பொறுத்தவரை பயிற்சியாளர் பெரிய விஷயம் அல்ல - ஸ்மிருதி மந்தனா


வீராங்கனைகளை பொறுத்தவரை பயிற்சியாளர் பெரிய விஷயம் அல்ல - ஸ்மிருதி மந்தனா
x
தினத்தந்தி 22 July 2023 2:25 AM GMT (Updated: 22 July 2023 2:38 AM GMT)

எங்களால் முடிந்த வரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த நாங்கள் விரும்புகிறோம் என இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்தார்.

டாக்கா,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியினர் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றனர். இந்தியா-வங்கதேசம் இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா அளித்த பேட்டியில் வீராங்கனைகளை பொறுத்தவரை பயிற்சியாளர் பெரிய விஷயம் அல்ல. எங்களால் முடிந்த வரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

இந்திய பெண்கள் அணிக்கு நீண்டகால அடிப்படையில் தலைமை பயிற்சியாளரை இந்திய கிரிக்கெட் வாரியம் தேடிக்கொண்டிருக்கிறது. விரைவில் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு விடுவார். வீராங்கனைகளை பொறுத்தவரை பயிற்சியாளர் பெரிய விஷயம் அல்ல. எங்களால் முடிந்த வரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த நாங்கள் விரும்புகிறோம்.

பயிற்சியாளர்கள் உண்மையிலேயே உதவிகரமாக இருக்கிறார்கள். சில சமயம் புதிய பயிற்சி குழுவினர் புதுப்புது ஆலோசனைகளை வழங்குவது நமக்கு சாதகமாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய பெண்கள் அணிக்கு 6 மாதங்களாக தலைமை பயிற்சியாளர் இல்லை. அந்த பொறுப்புக்கு மும்பையைச் சேர்ந்த முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் அமோல் முஜூம்தார் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.


Next Story