டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் காயத்தால் அவதி


டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் காயத்தால் அவதி
x

கோப்புப்படம் 

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் தசைப்பிடிப்பு காயத்தால் அவதிப்படுகிறார்.

பிரிஸ்பேன்,

டி20 உலகக்கோப்பையில் நேற்று அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் 63 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருது பெற்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் தசைப்பிடிப்பு காயத்தால் அவதிப்படுகிறார். அயர்லாந்து பேட்டிங்கின் போது பாதியிலேயே பெவிலியன் திரும்பினார். எஞ்சிய நேரம் அவருக்கு பதிலாக மேத்யூ வேட், மேக்ஸ்வெல் கேப்டன் பணியை கவனித்தனர்.

இது குறித்து பிஞ்ச் கூறுகையில், 'கொஞ்சம் தசைப்பிடிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அது மோசமானதாக இருக்கும் என்று நினைக்கவில்லை. நாளை (இன்று) ஸ்கேன் எடுத்து பார்த்த பிறகே காயத்தன்மை குறித்து முழுமையாக தெரிய வரும்.

வருகிற 4-ந்தேதி நடக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்குள் உடல்தகுதியை எட்டிவிடுவேன் என்று நம்புகிறேன்' என்றார். இதே போல் ஆல்-ரவுண்டர் டிம் டேவிட்டுக்கும் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீல்டிங்கின் போது ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.


Next Story