ஏசிசி பெண்கள் எமர்ஜிங் ஆசிய கோப்பை: இந்தியா 'ஏ' அணி சாம்பியன்...!

Image Courtesy: @ACCMedia1
ஏசிசி பெண்கள் எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா ‘ஏ’ அணி சாம்பியன் பட்டம் வென்றது.
மோங் கோக்,
ஏசிசி பெண்கள் எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடருக்கான இறுதிப்போட்டியில் இந்தியா 'ஏ' பெண்கள் மற்றும் வங்காளதேசம் 'ஏ' பெண்கள் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 'ஏ'அ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழாந்து 127 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் விருந்தா தினேஷ் 36 ரன், கனிகா அகுஷா 30 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களம் இறங்கியது. அந்த அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 96 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 'ஏ' அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
Related Tags :
Next Story






