ரஜினி ஸ்டைலில் கபாலி போஸ்...! தோனி சொன்ன சுவாரஸ்ய பதில்


ரஜினி ஸ்டைலில் கபாலி போஸ்...!  தோனி சொன்ன சுவாரஸ்ய பதில்
x

‘கபாலி’ படத்தில் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருக்கும் ரஜினியின் போஸ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

சென்னை,

நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த 2016-ல் வெளிவந்த 'கபாலி' படத்தில் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருக்கும் ரஜினியின் போஸ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இந்த நிலையில் ரஜினிகாந்தைப் போல அதே பாணியில் சென்னை அணியின் கேப்டன் தோனியும் போஸ் கொடுத்திருப்பார். அந்த புகைப்படத்தை தோனி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்த போட்டோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மேலும் லட்சக்கணக்கான லைக்கை பெற்றது.

இந்த நிலையில் அது குறித்து தோனியிடம் கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு தோனி கூறுகையில் ,

இதில் ஒப்பீடு எதுவும் இல்லை. ஒரு சிறந்த மனிதரின் சிறந்த போஸை காப்பி செய்ய முயன்றேன். அவ்வளவுதான். அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை. ஏனெனில் அவரை போல யோசிப்பதும், செயல்படுவதும் மிகவும் கடினமானது. இருந்தாலும் அவரது போஸை ஆவது முயன்று பார்க்கலாம் என செய்ததுதான்" என தோனி தெரிவித்துள்ளார்.

சென்னை அணி ஐபிஎல் போட்டியில், 21 ஆம் தேதி சேப்பாக்கத்தில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.


Next Story