டி20 உலகக்கோப்பை தொடருக்கான புதிய ஜெர்சியை வெளியிட்ட ஆப்கானிஸ்தான் அணி


டி20 உலகக்கோப்பை தொடருக்கான புதிய ஜெர்சியை வெளியிட்ட ஆப்கானிஸ்தான் அணி
x

Image Courtesy: @ACBofficials

டி20 உலகக்கோப்பை தொடருக்கான புதிய ஜெர்சியை ஆப்கானிஸ்தான் அணி வெளியிட்டுள்ளது.

காபூல்,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.

இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது. இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ள 20 அணிகளில் பாகிஸ்தானை தவிர மற்ற அனைத்து அணிகளும் தங்களது அணி விவரங்களை அறிவித்து விட்டன.

இந்நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ள ஆப்கானிஸ்தான் அணி இந்த தொடருக்கான புதிய ஜெர்சியை வெளியிட்டுள்ளது. தற்போது இது தொடர்பாக புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story