இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் நியமனம்


இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் நியமனம்
x
தினத்தந்தி 4 July 2023 4:25 PM GMT (Updated: 4 July 2023 4:36 PM GMT)

தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வீரர் அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வீரர் அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

சுலக்ஷனா நாயக், த அசோக் மல்ஹோத்ரா மற்றும் ஜதின் பரஞ்சபே ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி), தேர்வுக் குழுவில் ஒரு தேர்வாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களை நேர்காணல் செய்தது. மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு, அஜித் அகர்கரை தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு ஒருமனதாக பரிந்துரைத்துள்ளது.என தெரிவித்துள்ளது.

அஜித் அகர்கர் முன்பு தலைமை தேர்வாளர் குழுவில் இடம் பெற்றிருந்தார்.. ஐபிஎல்லில் கடந்த இரண்டு சீசன்களில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் உதவி பயிற்சியாளராக அகர்கர் இருந்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணிக்காக அவர் ஆடிய நாட்களில் சிறப்பாக ஆடி உள்ளார்.மேலும் அணி வெற்றி பெற முழு பங்களிப்பை அளிக்கும் வீரராக இருந்துள்ளார்.ஓய்விற்கு பிறகு வர்ணனையாளராக மாறினார்.


Next Story