சர்பராஸ் கானின் தந்தைக்கு தார் ஜீப்பை பரிசளித்தார் ஆனந்த் மஹிந்திரா


சர்பராஸ் கானின் தந்தைக்கு தார் ஜீப்பை பரிசளித்தார் ஆனந்த் மஹிந்திரா
x

Image Courtesy; Instagram - sarfarazkhan97

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்பராஸ் கான் 3 அரை சதங்களுடன் 200 ரன்கள் அடித்துள்ளார்.

மும்பை,

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-வது கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டில் நடைபெற்றது. கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக ரன்கள் குவித்து வந்த சர்பராஸ் கான் நீண்ட போராட்டத்திற்கு பின் இப்போட்டியில் அறிமுகமானார்.

இந்த போட்டியை காண சர்பராஸ் கான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வந்திருந்தனர். சர்பராஸ் கான் இந்திய அணியின் தொப்பியை பெற்றுக் கொண்டதும் அவரது தந்தை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தார். அதேபோல் சர்பராஸ் கான் மனைவியும் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

இந்த டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய சர்பராஸ் கான் 3 அரை சதங்களுடன் 200 ரன்கள் அடித்துள்ளார். இதையடுத்து சர்பராஸ் கானின் தந்தைக்கு தார் ஜீப்பை பரிசளிக்க விரும்புவதாக ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அதில், தைரியத்தை இழந்துவிட வேண்டாம். கடின உழைப்பு. தைரியம். பொறுமை போன்ற ஒரு தந்தையின் குணங்களை விட, ஒரு குழந்தைக்கு ஊக்கமளிக்க சிறந்த குணங்கள் ஏதேனும் உள்ளதா?. தனது மகனுக்கு உத்வேகம் தரும் ஒரு தந்தையாக இருப்பதற்காக, சர்பராஸ் கானின் தந்தையான நௌஷாத் கானுக்கு 'மஹிந்திரா தார்' காரை பரிசளிக்க விரும்புகிறேன்.

எனது பரிசை அவர் ஏற்றுக்கொண்டால் அது எனது பாக்கியம் மற்றும் கவுரவமாக கருதுவேன்' என்று பதிவிட்டிருந்தார்.அதன்படி, இந்திய வீரர் சர்பராஸ் கானின் தந்தைக்கு தார் ஜீப்பை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பரிசளித்துள்ளார்.

1 More update

Next Story