ஆஷஸ் 3வது டெஸ்ட்: பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து...!


ஆஷஸ் 3வது டெஸ்ட்: பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து...!
x

Image Courtesy: @englandcricket

தினத்தந்தி 5 July 2023 5:25 PM IST (Updated: 5 July 2023 5:28 PM IST)
t-max-icont-min-icon

3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.

லீட்ஸ்,

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 2 டெஸ்டில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை ( 6-ந் தேதி) தொடங்குகிறது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.

தோற்றால் தொடரை இழந்துவிடும். இதனால் வெற்றிக்காக அந்த அணி வீரர்கள் கடுமையாக போராடுவார்கள். . இந்தப் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறது.

இந்நிலையில் 3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. அந்த அணியில் காயம் அடைந்த ஓலி போப், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோஷ் டங்கு நாகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக மொயீன் அலி, மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி:-

ஜேக் க்ராவ்லி, பென் டக்கட், ஹாரி புரூக், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுர், ஓலி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட்.




Next Story