ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல்-லின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர்: கேரி கிர்ஸ்டன்


ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல்-லின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர்: கேரி கிர்ஸ்டன்
x

image tweeted by @ bcci/ipl

ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல்-லின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர் என குஜராத் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கூறியுள்ளார்.

அகமதாபாத்,

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக களமிறங்கி சிறப்பாக விளையாடியது. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்ததுடன், இறுதிப்போட்டிக்குள் நுழைந்து கோப்பையையும் தனதாக்கியது.

இந்த சாதனைக்கு அந்த அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதை கூறினாலும், பயிற்சியாளர்களின் பங்களிப்பும் அளப்பரியது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ரா உள்ளார். அவரை அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளரும் ஆலோசகருமான கேரி கிர்ஸ்டன் புகழ்ந்துள்ளார்.

நெஹ்ரா குறித்து அவர் கூறும்போது, ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல்-லின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவராக விளங்குகிறார். அவர் எனது நெருங்கிய நண்பர். நாங்கள் இருவரும் ஒன்றாக நீண்ட பயணம் செய்துள்ளோம்" என்று கிர்ஸ்டன் கூறினார்.

"அவர் தனது வீரர்களைப் பற்றி எப்போதும் சிந்தித்து அவர்களுக்கு எப்படி உதவ முடியும் எனது மனதுடன் பயிற்சியளிக்கிறார்.] மேலும் சிறப்பாக விளையாடுவது எப்படி என்பது பற்றி எப்போதும் தனது வீரர்களுடன் பேசிக் கொண்டிருப்பார்" என்று கிர்ஸ்டன் கூறினார்.

1 More update

Next Story