ஆசிய கோப்பை: இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேசம் பேட்டிங் தேர்வு


ஆசிய கோப்பை:  இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேசம் பேட்டிங் தேர்வு
x

Image : ICC tweet 

டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார்

பல்லகெலே,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது.

இதன்படி இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. அதில் நேபாள அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றியோடு தொடங்கியது.

இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பல்லகெலேயில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 2-வது லீக்கில் நடப்பு சாம்பியன் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேசத்தை சந்திக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது

வங்காளதேச அணி :

முகமது நைம், தன்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தௌஹித் ஹிரிடோய், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான்.

இலங்கை அணி :

பதும் நிஸ்ஸங்கா , திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா , சரித் அசலங்கா , தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனகா, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா , கசுன் ராஜித, மதீஷ பத்திரன

1 More update

Next Story