ஆசிய கோப்பை: அணியில் மூத்த வீரர்கள் இல்லாதது பெரிய இழப்பு - வங்காளதேச கேப்டன்


ஆசிய கோப்பை: அணியில் மூத்த வீரர்கள் இல்லாதது பெரிய இழப்பு - வங்காளதேச கேப்டன்
x

Image : AFP 

மூத்த வீரர்கள் இல்லாதது அணிக்கு மிகப் பெரிய இழப்பு என வங்காளதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார் .

கராச்சி,

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது.இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-நேபாளம் அணிகள் மோதி வருகின்றன.நாளை நடைபெறும் போட்டியில் வங்காளதேசம் இலங்கை அணிகள் மோதுகின்றன.

வங்காளதேச அணியில் லிட்டன் தாஸ், தமிம் இக்பால் , எபடோட் ஹொசைன் போன்ற மூத்த வீரர்கள் ஆசியக் கோப்பை தொடரில் விளையாடவில்லை.லிட்டன் தாஸ் தீவிர காய்ச்சல் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. காயம் காரணமாக தமிம் இக்பால், எபடோட் ஹொசைன் அணியில் இடம்பெறவில்லை

இந்த நிலையில் மூத்த வீரர்கள் இல்லாதது வங்காளதேச அணிக்கு மிகப் பெரிய இழப்பு என அந்த அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக ஷகிப் அல் ஹசன் கூறியதாவது ,

அணியில் மூத்த வீரர்கள் இல்லாதது உண்மையில் பெரிய இழப்பு. லிட்டன் தாஸ் கடந்த 4-5 ஆண்டுகளாக வங்கதேச அணிக்காக சிறப்பாக விளையாடி வந்தார். அவர் அணியில் இல்லை. மூத்த வீரர்கள் அணியில் இல்லாதது மற்ற வீரர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும். அவர்கள் இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்புகிறேன்.நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.-


Next Story