ஆசிய கோப்பை : வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா பந்துவீச்சு தேர்வு ..!
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்
கொழும்பு,
ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர்4 சுற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் மோதுகின்றன.
தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. நேற்று பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது .
எனவே இந்த ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இந்திய அணியில் திலக் வர்மா இன்று தனது ஒருநாள் அறிமுக ஆட்டத்தில் விளையாடுகிறார்.
இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷன் ,ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா.
வங்காளதேச அணி:
லிட்டன் தாஸ் , தன்சித் ஹசன் தமீம், அனாமுல் ஹக், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், ஷமிம் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், மஹேதி ஹசன், நசும் அகமது, தன்சிம் ஹசன், முஸ்தாபிசுர் ரஹ்மான்