ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் விலக வாய்ப்புள்ளதாக தகவல்


ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் விலக வாய்ப்புள்ளதாக தகவல்
x

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றால் அதில் பங்கேற்க மாட்டோம் என பி.சி.சி.ஐ. அறிவித்திருந்தது. இதையடுத்து இந்தியாவுடனான போட்டிகளை பொதுவான இடத்திலும், மற்ற நாடுகளின் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தவும் பாகிஸ்தான் பரிந்துரை செய்திருந்தது.

இந்தியாவுடனான போட்டிகளை துபாயில் நடத்த பரிந்துரைக்கப்பட்டதாகவும், இந்த பரிந்துரையை இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் ஏற்க மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



Next Story