ஆசிய கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டி மீண்டும் தொடங்கியது..!


ஆசிய கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டி மீண்டும் தொடங்கியது..!
x
தினத்தந்தி 2 Sept 2023 3:42 PM IST (Updated: 2 Sept 2023 4:00 PM IST)
t-max-icont-min-icon

மழையால் சிறிது நேரம் நிறுத்தப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி மீண்டும் தொடங்கியது

பல்லகெலே,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.

இதில் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் 238 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தையும், 2-வது லீக்கில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் தோற்கடித்தது.

இந்த நிலையில் தொடரின் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக்கில் இந்தியாவும், பாகிஸ்தானும் கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லகெலே ஸ்டேடியத்தில் மோதுகின்றன .இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் 4.2 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்தது..அப்போது திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நின்றதால் போட்டி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.


Next Story