ஆசிய கோப்பை தொடர்; நாளை மதியம் வெளியாகும் இந்திய அணி - புதிய தகவல்...!


ஆசிய கோப்பை தொடர்; நாளை மதியம் வெளியாகும் இந்திய அணி - புதிய தகவல்...!
x

Image Courtesy : @BCCI twitter

நாளை மதியம் டெல்லியில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய அணியை புதிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது . கடந்த 10 வருடங்களாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது

உலகக்கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் தயாராகும் வகையில் வரும் 30ம் தேதி ஆசிய கோப்பை தொடங்குகிறது. உலக கோப்பைக்கு தேவையான இறுதிக்கட்ட அணியை தேர்வு செய்வதற்கு உதவும் இந்த தொடரில் பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் ஏற்கனவே தங்களுடைய அணிகளை அறிவித்து விட்டன.

ஆனால் ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய 2 முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்துள்ளதால் இந்தியா இதுவரை தங்களுடைய அணியை அறிவிக்காமல் தாமதம் செய்து வருகிறது.

இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை நாளை மதியம் 1.30 மணி அளவில் தலைநகர் டெல்லியில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய அணியை புதிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story