ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இந்தியாவுக்கு எதிரான ஆட்டம்...பாகிஸ்தானின் பிளேயிங் லெவன் அறிவிப்பு...!


ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இந்தியாவுக்கு எதிரான ஆட்டம்...பாகிஸ்தானின் பிளேயிங் லெவன் அறிவிப்பு...!
x

Image Tweet : Pakistan Cricket

தினத்தந்தி 10 Sept 2023 8:59 AM IST (Updated: 10 Sept 2023 10:48 AM IST)
t-max-icont-min-icon

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

கராச்சி,

ஆசிய கோப்பை தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதையடுத்து சூப்பர் 4 சுற்றின் ஆட்டங்கள் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. லீக் சுற்றில் இந்தியா -பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் மழை காரணமாக தடைப்பட்டது. இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் இரு அணிகளும் மோதுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான இந்த ஆட்டத்துக்கான பாகிஸ்தானின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் கடந்த ஆட்டத்தில் இடம் பெற்ற வீரர்கள் மாற்றமின்றி இடம் பிடித்துள்ளனர்.

பாகிஸ்தான் பிளேயிங் லெவன்:

இமாம் உல் ஹக், பக்கார் ஜமான், பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சல்மான் அலி ஆஹா, இப்திகார் அகமது, ஷதாப் கான் (துணை கேப்டன்), பஹீம் அஷ்ரப், ஷாகி அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரால்ப்.


1 More update

Next Story