ஆசிய விளையாட்டு போட்டி: இலங்கைக்கு வெற்றி இலக்காக 117 ரன்களை நிர்ணயித்தது இந்தியா


ஆசிய விளையாட்டு போட்டி:  இலங்கைக்கு  வெற்றி இலக்காக 117 ரன்களை  நிர்ணயித்தது இந்தியா
x

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவும் இலங்கையும் இதில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி, இலங்கை அணி முதலில் பந்து வீசியது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது.


Next Story