ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ் லட்சுமண் நியமனம்...!


ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ் லட்சுமண் நியமனம்...!
x

ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியினர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த தொடருக்கான இந்திய ஆண்கள் அணி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் இளம் வீரர்களை கொண்டு களம் இறங்குகிறது.

இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணிகள் நேரடியாக காலிறுதி ஆட்டத்தில் ஆட உள்ளன. இந்நிலையில் இந்த தொடருக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு பயிற்சியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்திய ஆண்கள் அணிக்கு விவிஎஸ் லக்ஷ்மனும், பெண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரிஷிகேஷ் கனிட்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்திய ஆடவர் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக சாய்ராஜ் பஹதுலேவும், பீல்டிங் பயிற்சியாளராக முனிஷ் பாலியும் பெண்கள் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக ரஜிப் தத்தாவும் பீல்டிங் பயிற்சியாளராக சுபதீப் கோஸும் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story