ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு..!!


ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு..!!
x

image courtesy; twitter/@ICC

தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

செஞ்சூரியன்,

மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரண்டு ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 3-வது ஆட்டத்தில் சரிவில் இருந்து எழுச்சி பெற்ற தென் ஆப்பிரிக்கா 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் ஆட்டம் செஞ்சூரியனில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணிகளுக்கான பிளெயிங் 11 பின்வருமாறு;-

தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, லுங்கி நிகிடி.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மார்னஸ் லாபுசாக்னே, அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மைக்கேல் நெசர், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.


Next Story