ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு 497 ரன் இலக்கு


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு 497 ரன் இலக்கு
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு 497 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடிலெய்டு,

ஆஸ்திரேலியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பகல்-இரவு ஆட்டம்) அடிலெய்டில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 511 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்து இருந்தது. தேஜ்நரின் சந்தர்பால் 47 ரன்களுடனும், ஆண்டர்சன் பிலிப் ஒரு ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 69.3 ஓவர்களில் 214 ரன்னில் ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. ஆனால் பாலோ-ஆன் வழங்காமல் தனது 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 31 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு 497 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை அடுத்து இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 22 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்தது. டிவோன் தாமஸ் 8 ரன்களுடனும், ஜாசன் ஹோல்டர் 8 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புள்ளது.


Next Story