ஐபிஎல் 2022 : மைதான பொறுப்பாளர்களுக்கு ரூ. 1.25 கோடி பரிசுத்தொகை - பிசிசிஐ அறிவிப்பு


ஐபிஎல் 2022 : மைதான பொறுப்பாளர்களுக்கு ரூ. 1.25 கோடி பரிசுத்தொகை -  பிசிசிஐ  அறிவிப்பு
x

Image Courtesy : IPL 

தினத்தந்தி 31 May 2022 6:47 AM GMT (Updated: 31 May 2022 6:50 AM GMT)

மைதான பொறுப்பாளர்கள், பராமரிப்பளர்களுக்கு பிசிசிஐ தரப்பில் ரூ. 1.25 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்,

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிரம்மாண்ட ஐபிஎல் இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் லீக் போட்டிகள் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் உள்ள 4 மைதானங்களில் நடைபெற்றது. அதை தொடர்ந்து பிளே ஆப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைத்தனத்திலும், இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திலும் நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த 6 ஐபிஎல் மைதானங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் மைதான பராமரிப்பளர்களுக்கு பிசிசிஐ தரப்பில் ரூ. 1.25 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மும்பை பிரபோர்ன், வான்கடே, டிஒய் பாட்டில் மற்றும் புனே எம்சிஏ மைதானங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், கொல்கத்தா ஈடன் கார்டன் மற்றும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திற்கு தலா 12.5 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story