லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு பேட்டிங் தேர்வு...!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
லக்னோ,
ஐபிஎல் தொடரின் இன்றைய 43வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி கடந்த ஆட்டத்தில் அதிரடியில் மிரட்டி 257 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. அந்த அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி 3 தோல்வி பெற்று புள்ளிபட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
அதேவேளையில் பெங்களூரு அணி கடந்த முறை லக்னோவிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க தீவிரமாக உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story