ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு பேட்டிங் தேர்வு...!


ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு பேட்டிங் தேர்வு...!
x

கோப்புப்படம் 

16வது ஐபிஎல் சீசன் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இத்தொடரில் இன்று 2லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

ஜெய்ப்பூர்,

16வது ஐபிஎல் சீசன் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இத்தொடரின் இன்று 2லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் ஜெய்ப்பூரில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இரு அணிகளும் மோதுவதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.


Next Story