சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனிக்கு பதில் பென்ஸ் ஸ்டோக்ஸ் கேப்டன்...?


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனிக்கு பதில் பென்ஸ் ஸ்டோக்ஸ் கேப்டன்...?
x

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனிக்கு பதில் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கபடாலாம் என முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், விடுவிக்கப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள் ரூ.167 கோடி செலவு செய்து 29 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 80 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இந்த ஏலத்தில் சென்னை அணி எடுத்த வீரர்கள் முழு விவரம்:

ஏலத்தில் முதல் வீரராக, இந்திய வீரர் ரகானேவை அடிப்படை தொகையான ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது. கடந்த தொடரில் இவர் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

பென் ஸ்டோக்ஸ்: இங்கிலாந்தைச் சேர்ந்த அதிரடி வீரரான பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடி எனும் தொகைக்கு ஏலத்தில் எடுத்தது . ஷேக் ரஷீத்: ஆந்திராவைச் சேர்ந்த 18 வயதான ஷேக் ரஷீத்தை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

அரியானாவைச் சேர்ந்த நிஷாந்த் சிந்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார். இவரை இறுதியில் ரூ. 60 லட்சத்திற்கு சென்னை அணி சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.

நியூசிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜேமிசனை அடிப்படை தொகையான ரூ.1 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

அஜய் மண்டல்: சத்தீஸ்கரைச் சேர்ந்த ஆல்-ரவுண்டரான அஜய் மண்டல் என்பவரையும், ஐதராபாத்தை சேர்ந்த பகத் வர்மாவையும் ரூ.20 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விவரம் வருமாறு: எம்.எஸ்.டோனி, டேவான் கான்வே, ருதுராஜ், ராயுடு, சேனாபதி, மொயின் அலி , ஷிவம் துபே, ஹங்கர்கேகர், பிரிட்டோரியஸ், சான்ட்னர், ஜடேஜா, துஷார், முகேஷ், பத்திரனா, சிமர்ஜீத், தீபக் சாஹர், சோலங்கி, தீக்ஷனா, ஸ்டோக்ஸ், ரஹானே, ரஷீத், நிஷாந்த் சிந்து, ஜமீசன், அஜய் மான்டால் , பகத் வர்மா

சென்னை சூப்ப்ர் கிங்ஸ் அணிக்கு எம்.எஸ். மகேந்திர சிங் தோனிக்கு பதில் பென்ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கபடாலாம் என கூறப்படுகிறது.

இதனை நியூசிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்

ஐபிஎல் 2023 சீசனுக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனின் பொறுப்பிஅ பென் ஸ்டோக்ஸிடம் ஒப்படைக்கலாம்.தோனி ஒரு வீரராக ஐபிஎல் போட்டிகளில் இருந்து விடைபெறும் முன் கேப்டன் பதவியை ஒப்படைக்க விரும்புவார்.பென் ஸ்டோக்ஸ் எதிர்காலத்தில் சென்னை சூப்ப்ர் கிங்ஸ்சை வழிநடத்த சிறந்த வேட்பாளராக இருப்பார் என்றும் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிஎஸ்கே பிளேஆப்களுக்குச் செல்லத் தவறியதால், 2023 இல் ஐபிஎல் போட்டிகளுக்கு திரும்புவேன் என்று எம்எஸ் தோனி உறுதிப்படுத்தினார். 4 முறை பட்டம் வென்று கொடுத்த தோனி ஓய்வு வதந்திகளை நிராகரித்து, ஐபிஎல் விளையாட நிச்சயமாக திரும்புவேன் என்று கூறினார்.

2019 க்குப் பிறகு முதல்முறையாக ஐபிஎல் போட்டிகளுக்கு திரும்பியதன் மூலம் இந்தியா மற்றும் சென்னை முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாக தோனி கூறினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஓ காசி விஸ்வநாதன், எம்.எஸ்.தோனி ஐபிஎல் 2023 இல் சென்னையை தொடர்ந்து வழிநடத்துவார் என்று கூறி வருகிறார்.

ஐபிஎல் 2022 சீசனுக்கு ஒரு நாள் முன்னதாக தோனி கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐபிஎல்லின் முதல் பாதியில் சிஎஸ்கேயை ஜடேஜா வழிநடத்தினார்.இரண்டாவது பாதியில் கேப்டன் பொறுப்பை தோனியிடம் ஒப்படைத்தார் ஜடேஜா.

ஸ்டோக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக நல்ல பார்மில் இருக்கிறார், அவர் தலைமையில் 10 டெஸ்டில் 9ல் வெற்றி பெற்றுள்ளது.


Next Story