பிக் பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: 14வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியீடு


பிக் பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: 14வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியீடு
x

Image courtesy: @BBL

பிக் பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 14வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மெல்போர்ன்,

இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் தொடர் போல் உலகின் பல்வேறு நாடுகளில் டி20 கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரில் இதுவரை 13 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன.

இதுவரை நடந்து முடிந்த 13 சீசன்களில் அதிகபட்சமாக பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் 14வது சீசனுக்கான போட்டி அட்டவணையை பிக் பாஷ் லீக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்ள உள்ள இந்த தொடரின் முதல் ஆட்டம் வரும் டிசம்பர் 15ம் தேதி நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோத உள்ளன. லீக் சுற்று ஆட்டங்கள் டிசம்பர் 15ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து ஜனவரி 21ம் தேதி குவாலிபையர் ஆட்டமும், ஜனவரி 22ம் தேதி நாக் அவுட் ஆட்டமும், ஜனவரி 24ம் தேதி சேலஞ்சர் ஆட்டமும், ஜனவரி 27ம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெற உள்ளன.

1 More update

Next Story