'வெற்றியில் பவுலர்களுக்கு உரிய பங்கு கிடைக்க வேண்டும்' - ஹர்திக் பாண்ட்யா


வெற்றியில் பவுலர்களுக்கு உரிய பங்கு கிடைக்க வேண்டும் - ஹர்திக் பாண்ட்யா
x

தொடர்ந்து 2-வது முறை ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார்.

ஆமதாபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை தோற்கடித்து 9-வது வெற்றியை ருசித்ததுடன் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.

வெற்றிக்கு பிறகு குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில், 'தொடர்ந்து 2-வது முறையாக நாங்கள் 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் வீரர்களின் செயல்பாட்டை நினைத்து பெருமைப்படுகிறேன். சவாலான சூழ்நிலைகளில் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருந்தனர். பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற நாங்கள் தகுதி படைத்தவர்கள்.

நாங்கள் எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டோம். நாங்கள் சில ஆட்டங்களில் நிறைய தவறுகள் செய்தாலும் அதில் இருந்து வலுவாக மீண்டு வந்ததுடன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தோம். பவுலர்கள் எனது இதயத்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள். சில சமயங்களில் வெற்றியில் பேட்ஸ்மேன்களுக்கு தான் நிறைய பாராட்டு சேருகிறது. நான் எப்போதும் பந்து வீச்சாளர்களின் கேப்டன். வெற்றியில் பவுலர்களுக்கு உரிய பங்கு கிடைக்க வேண்டும் என்று விரும்புபவன். அதற்கு அவர்கள் தகுதி படைத்தவர்கள்' என்றார்.


Next Story