இந்திய ஆடுகளங்களில் பந்து வீசுவது இங்கிலாந்து பவுலர்களுக்கு சவாலாக இருக்கும் - ஜேம்ஸ் ஆண்டர்சன்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
லண்டன்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர், வரும் 25ம் தேதி தொடங்குகிறது. ஐதராபாத், விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி, தரம்சாலாவில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பரான துருவ் ஜூரல் அறிமுக வீரராக இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், இந்திய ஆடுகளங்களில் பந்து வீசுவது இங்கிலாந்து பவுலர்களுக்கு சவாலாக இருக்கும் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
எங்கள் அணிக்கு வேண்டிய தகவல்களை பகிரும் கடமை எனக்கு உள்ளது. இந்தியாவில் இதற்கு முன்பு பந்து வீசாத பவுலர்கள் எங்கள் அணியில் உள்ளனர். அதனால் அது எங்களுக்கு மாறுபட்ட சவாலாக இருக்கும். அணிக்கு தேவையான நேரத்தில் உதவுவது அவசியம்.
இங்கிலாந்தில் பந்து வீசுவதுபோல வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியாவில் அதிக ஓவர்கள் வீச முடியாது. ஆனால், இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் ஓவர்களும் முக்கியம். அணிக்காக வெற்றி தேடி தரும் திறன் என்னிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.