"பும்ரா உலகின் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர்"- கவுதம் கம்பீர் புகழாரம்


பும்ரா உலகின் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர்- கவுதம் கம்பீர் புகழாரம்
x

பும்ராவை "உலகின் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர்" என்று புகழ்ந்த கம்பீர், அவருக்கும் ஷாஹீன் அப்ரிடிக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாக கூறியுள்ளார்.

புது டெல்லி,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விளையாட உள்ளது.

இரு அணிகளுமே வலுவாக உள்ள நிலையில், வேகப்பந்து வீச்சில் இந்திய வீரர் பும்ரா மற்றும் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடியை ஒப்பிட்டு பலரும் பேசி வருகின்றனர்.

ஆனால், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், பும்ராவை "உலகின் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர்" , அவருக்கும் ஷாஹீனுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்,

" ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சத்ரானை ஆட்டமிழக்க செய்த விதத்தை பார்க்கையில், உலக கிரிக்கெட்டில் ஒரு முழுமையான மற்றும் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர் என்றால் அது பும்ராதான். நாங்கள் பும்ரா மற்றும் ஷாஹீனை ஒப்பிட்டுப் பார்த்தோம். இருவருக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் புதிய பந்தில் அல்லது டெத் ஓவர்களின்போது நன்றாக பந்து வீசுவார்கள். ஆனால் பும்ரா மட்டுமே நடுத்தர ஓவரிலும் அதே தாக்கத்தை ஏற்படுத்துகிறார்' என்று கூறியுள்ளார்.


Next Story