சொந்த மண்ணில் இன்னிங்ஸ் தோல்வி- "தேநீர் தயாராவதற்குள் இங்கிலாந்து ஆல் அவுட்டாகிவிடும்"- முன்னாள் வீரர் சாடல்


சொந்த மண்ணில் இன்னிங்ஸ் தோல்வி- தேநீர் தயாராவதற்குள் இங்கிலாந்து ஆல் அவுட்டாகிவிடும்- முன்னாள் வீரர் சாடல்
x

Image Tweeted By: @ICC

லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது.

லண்டன்,

இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லார்ட்சில் மைதானத்தில் கடந்த 19 ஆம் தேதி நடந்தது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 165 ரன்னில் ஆல்-அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 2-வது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 149 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த நிலையில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் ஜெஃப்ரி பாய்காட் விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர், இங்கிலாந்து வீரர்கள் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக பேட்டிங் செய்யும் போது சமையலறைக்கு சென்று தேநீர் கூட தயாரிக்க முடியாது. ஏனெனில் தேநீர் தயாராகி நீங்கள் திரும்பி வருவதற்குள் ஒட்டுமொத்த அணியும் ஆல் அவுட்டாகிவிடும் என தெரிவித்துள்ளார்.


Next Story