சென்னை, மும்பை அல்ல...ஐபிஎல் பட்டத்தை இந்த அணி தான் வெல்லும் - ரவிசாஸ்திரி கருத்து


சென்னை, மும்பை அல்ல...ஐபிஎல் பட்டத்தை இந்த அணி தான் வெல்லும் - ரவிசாஸ்திரி கருத்து
x

Image Courtesy: AFP 

இந்த வருட ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மும்பை,

16வது ஐபிஎல் சீசன் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ள இந்த தொடரில் அனைத்து அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தீவிரமாக பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் பட்டத்தை குஜராத் அணி தான் கைப்பற்றும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,

தற்போதைய பார்ம் மற்றும் புள்ளி பட்டியலில் அணிகளின் வரிசையை பார்க்கும் போது குஜராத் அணிதான் கோப்பையை கைப்ற்றும் என நான் நினைக்கிறேன். இந்த அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது. 7 - 8 வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அணி வீரர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை மிகச்சரியாக பூர்த்தி செய்கிறார்கள்.

அடுத்து சஞ்சு சாம்சன் கேப்டனாக மிகவும் முதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் தனது சுழற்பந்து வீச்சாளர்களை நன்றாக பயன்படுத்துகிறார். ஒரு நல்ல கேப்டன் மட்டுமே 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடி அவர்களை நன்றாக பயன்படுத்தி கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story