பஞ்சாப்புக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு..!
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
சென்னை,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும்.
இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் ஆட வேண்டும். லீக் சுற்று முடிவில் 'டாப்-4' இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணியை சந்திக்கிறது.
டோனி தலைமையிலான சென்னை அணி 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி (லக்னோ, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா அணிகளுக்கு எதிராக), 3 தோல்வியுடன் (குஜராத், ராஜஸ்தான் அணிக்கு எதிராக 2 முறை) 10 புள்ளிகள் பெற்றுள்ளது.ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி 4 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.