கான்வே, டேரில் மிட்சேல் அரைசதம்: இந்தியாவுக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து


கான்வே, டேரில் மிட்சேல் அரைசதம்: இந்தியாவுக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து
x
தினத்தந்தி 27 Jan 2023 8:45 PM IST (Updated: 27 Jan 2023 8:57 PM IST)
t-max-icont-min-icon

நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.

ராஞ்சி,

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. .

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக பின் ஆலனும், டிவோன் கான்வேயும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

பின் ஆலன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கான்வே சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 52 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசிகட்டத்தில் தனது அதிரடியை காட்டிய டேரில் மிட்சேல் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார்.

குறிப்பாக அர்ஸ்தீப்சிங் வீசிய கடைசி ஓவரை மூன்று சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். அந்த ஓவரில் மட்டும் அர்ஸ்தீப் சிங் 27 ரன்களை எதிரணிக்கு வாரி வழங்கினார். மிட்சேல் 30 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 59 ரன்கள் திரட்டினார்.

இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாட உள்ளது.


Next Story