தவானின் கிரிக்கெட் வாழ்க்கை சோகத்துடன் முடிவுக்கு வருகிறது" - இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கணிப்பு!


தவானின் கிரிக்கெட் வாழ்க்கை சோகத்துடன் முடிவுக்கு வருகிறது - இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கணிப்பு!
x

“தவானின் கிரிக்கெட் வாழ்க்கை சோகத்துடன் முடிவுக்கு வருகிறது என இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கணித்து உள்ளார்.

மும்பை

சமீபத்தில் முடிவடைந்த வங்காள தேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் பேட்டிங்கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.இந்தியா 1-2 என தொடரை இழந்தது. தவான் 7, 8 மற்றும் 3 ரன்கள் எடுத்து இருந்தார்.

கடைசி ஒருநாள் போட்டியில், கட்டைவிரல் காயம் காரணமாக இந்திய கேப்டன் ரோகித் ஷர்மாவுக்குப் பதிலாக அணிக்கு வந்த இளம் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன், அதிவேக ஒருநாள் இரட்டைச் சதத்தை அடித்து சாதனை புரிந்தார்.

இந்தத் தொடருக்கான அணியில் இடம்பெறாத இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ஒருநாள் அணியில் தவானின் எதிர்காலம் குறித்து சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

கிஷன் மற்றும் கில் போன்ற இளம் வீரர்களின் தற்போதைய வடிவத்தை எடுத்துக்காட்டும்போது, இது தவானின் 'புகழ்பெற்ற ஒரு நாள் போட்டி வாழ்க்கையின்' முடிவாக இருக்கும் என்று கார்த்திக் கணித்து உள்ளார்.

இலங்கைக்கு எதிரான தொடரில் இஷான் கிஷனை சேர்க்காமல் இருக்க முடியாது. ஷுப்மான் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ரோகித் சர்மா திரும்பினால் தவானுக்கு இடம் இருக்காது. அது அவரது புகழ்பெற்ற வாழ்க்கைக்கு ஒரு சோகமான முடிவாக இருக்கலாம். என்று இணையதள விவாதத்தின் போது கார்த்திக் கூறினார்.

டெஸ்ட் மற்றும் 20 ஓவர் இரண்டிலும் ஓரங்கட்டப்பட்ட தவான், இந்தியாவின் ஒருநாள் போட்டி அணியில் மட்டுமே உள்ளார். 50 ஓவர் போட்டிகளில் சில சந்தர்ப்பங்களில் இந்திய அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார்.


Next Story