சி.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாட ஒப்பந்தமாகியுள்ள சி.எஸ்.கே. முன்னாள் வீரர்...!


சி.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாட ஒப்பந்தமாகியுள்ள சி.எஸ்.கே. முன்னாள் வீரர்...!
x

Image Courtesy: @ChennaiIPL

தினத்தந்தி 12 Aug 2023 6:52 AM IST (Updated: 12 Aug 2023 11:05 AM IST)
t-max-icont-min-icon

சி.பி.எல். கிரிக்கெட் தொடரில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்சுக்காக விளையாட சி.எஸ்.கே. முன்னாள் வீரர் ஒப்பந்தமாகியுள்ளார்.

மும்பை,

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் 37 வயதான அம்பத்தி ராயுடு, கடந்த மே மாதம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்ற கையோடு ஐ.பி.எல்.-ல் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீசில் நடக்கும் கரிபீயன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கும் 6 அணிகளில் ஒன்றான செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்சுக்காக விளையாட அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆனால், இந்திய வீரர்கள் ஓய்வுக்கு பிறகு உடனடியாக வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட முடியாது. ஓராண்டு கால இடைவெளி விட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் சமீபத்தில் பரிந்துரை செய்யப்பட்டது.

ஆனால் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இதனால் அம்பத்தி ராயுடு விவகாரத்தில் கிரிக்கெட் வாரியம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. அவருக்கு கிரிக்கெட் வாரியம் பச்சைக்கொடி காட்டினால், சி.பி.எல். போட்டியில் கால்பதிக்கும் 2-வது இந்தியராக அறியப்படுவார். ஏற்கனவே சுழற்பந்து வீச்சாளர் பிரவின் தாம்பே ஆடியுள்ளார்.


Next Story