உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு பயணிக்க பாகிஸ்தான் வீரர்களுக்கு 'விசா'


உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு பயணிக்க பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா
x

image courtesy: ICC via ANI

இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ள பாகிஸ்தான் அணிக்கு ‘விசா’ கிடைத்திருக்கிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ள பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்குவதில் இழுபறி நீடித்தது. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் விசா வழங்குவதில் கால தாமதம் செய்வதாகவும், இது உலகக் கோப்பை போட்டிக்கு தங்கள் அணி தயாராவதில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) புகார் செய்தது.

இந்த நிலையில் விசா பிரச்சினை நேற்று தீர்ந்தது. ஆனால் இந்தியாவுக்கு புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாகத்தான் அவர்களுக்கு 'விசா' கிடைத்திருக்கிறது. பாகிஸ்தான் அணி நாளை அதிகாலை துபாய் வழியாக ஐதராபாத் செல்கிறது. 29-ந்தேதி ஐதராபாத்தில் நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை சந்திக்கிறது.

பாகிஸ்தான் அணி முதலில் துபாய் சென்று அங்கு இரு நாட்கள் பயிற்சி எடுத்து விட்டு இந்தியாவுக்கு வர திட்டமிட்டு இருந்தது. ஆனால் 'விசா' தாமதத்தால் இந்த திட்டத்தை கைவிட வேண்டியதாகிவிட்டது.


Next Story