19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்...!
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை இந்தியா அதிகபட்சமாக 5 முறை வென்றுள்ளது
புளோயம்பாண்டீன்,
15-வது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் நாளை தொடங்கி பிப்ரவரி 11-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன.இந்திய அணி 'ஏ' பிரிவில் உள்ளது. அமெரிக்கா, வங்காளதேசம், அயர்லாந்து ஆகிய அணிகள் அந்த பிரிவில் உள்ளன. நாளைய தொடக்க ஆட்டங்களில் அமெரிக்கா-அயர்லாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் ('பி' பிரிவு) அணிகள் மோதுகின்றன.இந்திய அணி முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்தை வரும் 20-ந்தேதி எதிர் கொள்கிறது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை இந்தியா அதிகபட்சமாக 5 முறை வென்றுள்ளது. ஆஸ்திரேலியா 3 முறையும், பாகிஸ்தான் 2 முறையும், இங்கிலாந்து, தென்ஆப்பி ரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம் தலா 1 முறையும் உலகக் கோப்பையை வென்றுள்ளன.
Related Tags :
Next Story