சி.எஸ்.கே. கேப்டனாக தோனிக்கு 200வது போட்டி...பரிசளிக்க காத்திருக்கும் ஜடேஜா
நாளை நடைபெறும் போட்டியில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என சென்னையின் நட்சத்திர ஆட்டக்காரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தேனிக்காக நாளை நடைபெறும் போட்டியில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என சென்னையின் நட்சத்திர ஆட்டக்காரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்-ல் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சென்னை- ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை வீரர் ஜடேஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தனது 200 ஆவது போட்டியில் தோனி நாளை களமிறங்கிகுறார்.
கேப்டனாக 200 ஆவது போட்டியில் விளையாடும் தோனிக்கு நாளையை ஆட்டத்தில் வெற்றியை பரிசாக்குவோம் என ஜடேஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story