வெற்றி கோப்பையுடன் சிஎஸ்கே வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்..!
சென்னை வந்த வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை,
'16-வது ஐபிஎல் தொடரின் தொடரின் இறுதி போட்டி நேற்று குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இறுதி போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின. இதில் முடிவில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்த நிலையில் வெற்றி கோப்பையுடன் அணி வீரர்கள் , பயிற்சியாளர்கள் , நிர்வாகிகள் இன்று மதியம் சென்னை வந்தடைந்தனர். சென்னை வந்த வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story