சிஎஸ்கே வெற்றி: சிலுவைகளை சுமந்த சரித்திர நாயகனுக்கு வாழ்த்துக்கள் - ஹர்பஜன் சிங்
சிலுவைகளை சுமந்த சரித்திர நாயகனுக்கு வாழ்த்துக்கள். சிஎஸ்கே வெற்றிக்கு தன் பாணியில் வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன் சிங்!
சென்னை,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் குஜராத்தை சாய்த்து 5-வது முறையாக மகுடம் சூடியது. சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்ததோடு கோப்பையை உச்சிமுகர்ந்தது.
இந்தநிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறியதாவது:-
ஒரு வாழ்க்கை அதை வரலாறா வாழனும், அந்த வகையில் எம்.எஸ்.டோனி வாழ்க்கை ஒரு பாடம். இவர் எப்படி கப் அடிப்பாருன்னு கூப்பாடு போட ஒரு கூட்டம் இருந்தப்ப இப்படி தான் வளர்ந்தேன்னு வாழ்ந்து காட்டிய சிஎஸ்கே ஞானிக்கு மீண்டும் ஒரு ஐபிஎல். சிலுவைகளை சுமந்த சரித்திர நாயகனுக்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story