சிஎஸ்கே வெற்றி; இன்ஸ்டாகிராம் முகப்பு புகைப்படத்தை மாற்றிய ஜடேஜா...!


சிஎஸ்கே வெற்றி; இன்ஸ்டாகிராம் முகப்பு புகைப்படத்தை மாற்றிய ஜடேஜா...!
x

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

அகமதாபாத்,

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த போட்டியில் 'டாஸ்' ஜெயித்த சென்னை கேப்டன் டோனி, முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 214 ரன்கள் குவித்தது. மழை குக்றுக்கீடு காரணமாக சென்னை அணியின் வெற்றிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இறுதியில் சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 எடுத்து திரில் வெற்றி பெற்றது. வெற்றிக்கு கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது அப்போது ஸ்டிரைக்கில் இருந்த ஜடேஜா சிக்ஸ் மற்றும் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

போட்டி முடிந்த பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் ஜடேஜாவை தூக்கி வைத்து டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்நிலையில் ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் முகப்பு புகைப்பத்தை மாற்றியுள்ளார். அதில் ஜடேஜாவை டோனி தூக்கியது போல உள்ள புகைப்படத்தை தனது முகப்பு புகைப்படத்தில் வைத்துள்ளார்.




Next Story